2013ம் ஆண்டு வெளியான ஃப்ரோஸன் படத்தின் தொடர்ச்சியாக மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ஃப்ரோஸன் 2 படம் நவம்பர் 22ம் தேதி வெளியாக உள்ளது. இந்தியாவில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் இந்த படம் டப்பிங் செய்யப்பட்டு வரும் நிலையில் இப்படத்திற்கான வசனங்களை விவேக் எழுதியுள்ளார். இப்படத்திற்கு ஸ்ருதி ஹாசன், திவ்ய தர்ஷினி குரல் கொடுத்துள்ளனர்.