சென்னை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.208 உயர்ந்து ரூ.29,152க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.25 உயர்ந்து, 3,644 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில மாதங்களாகவே தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. தங்கத்தை நெருங்க முடியாத நிலையில் மக்கள் இருக்கிறார்கள். இறக்குமதிக்கான வரி உயர்வே தங்கம் விலை உயர்வுக்கு காரணம் என்கின்றனர்.