ரஃபேல் விவகாரம் தொடர்பாக  பிரசாந்த் பூஷன், யஷ்வந்த் சின்ஹா உள்ளிட்டோர் தாக்கல் செய்த மறு சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து இன்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  மேலும், ராகுல் காந்தி மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், ‘வருங்காலத்தில் ராகுல் காந்தி கவனமாக பேசவேண்டும்’ என எச்சரிக்கை விடுத்து வழக்கு முடித்துவைக்கப்பட்டுள்ளது.