யதார்த்தங்களை காட்சிப்படுத்தும் முறையை மீறி படங்களை ரசிக்க வைப்பதாக இயக்குநர் கெளதம் மேனனின் படங்கள் அமையும், அப்படி எல்லோரையும் பெரிதும் ரசிக்க வைத்த ஒரு படம் வாரணம் ஆயிரம். மேக்னா, சூர்யா கதாபாத்திரங்களை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். 11 வருடங்களுக்கு முன்பு இதே நாளில் வெளியான இப்படத்தை கொண்டாடிவருகின்றனர். #11YearsOfVaaranamAayiram